பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்

       பதிவு : Mar 17, 2018 15:44 IST    
பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது. பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது.

மாவீரன், நான் ஈ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இறுதியாக 'பாகுபலி 2' வெளியானது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை குவித்து சாதனை படைத்தது. இந்த படம் தற்போது வரை சீனாவின் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கி திரையுலகின் பிரமாண்ட இயக்குனரான இவர் 2001முதல் தற்போது வரை 12 படங்களை இயக்கி உள்ளார்.

அனைத்தும் மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. இதன் பிறகு இவருடைய படங்களுக்கு தற்போது எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராமசரன் ஆகிய இருவரையும் வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

 

இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் நான்காவது முறையாகவும், நடிகர் ராம் சரண் இரண்டாவது முறையாகவும் இயக்குனர் ராஜமௌலியுடன் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம்சரணும் சகோதரர்களாக நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தை டிவிவி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.


பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்