சார்லி சாப்ளின் 2 படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் சக்தி சிதம்பரம்

       பதிவு : May 31, 2018 15:23 IST    
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சார்லி சாப்ளின் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை குறித்து தற்போது இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சார்லி சாப்ளின் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை குறித்து தற்போது இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படத்திற்கு பிறகு இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சார்லி சாப்ளின் 2'. இந்த படம் கடந்த 2002இல் வெளியான 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகர்களாக நடித்து பிரபு மற்றும் பிரபு தேவா இருவருமே இந்த படத்திலும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகிகளாக நடிகை நிக்கி கல்ராணி மற்றும் அடா சர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்களை ஒரே படத்தில் இணைத்து கலகலப்பான படமாக இயக்குனர் உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை சௌந்தராஜன் மேற்கொள்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறுகையில் "முழுக்க கமர்சியல் படமாக உருவாகி வரும் இந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் நாயகன் பிரபு தேவா மற்றும் வில்லன் தேவ் கில் மோதும் காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது.

 

இந்த படத்தில் பிரபு தேவா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு திருமணம் செய்ய குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய திருப்பதிக்கு செல்கின்றனர். அப்போது அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் சார்லி சாப்ளின் 2 படத்தின் கலகலப்பான கதை. பொதுவாக திருப்பதிக்கு சென்றால் யோகம் வரும் வாழ்க்கையில் திருப்பம் நடக்கும் என்பார்கள், அப்படி இவர்களுக்கு என்ன யோகம் அடிக்கிறது எந்த மாறியான திருப்பங்கள் இவர்களின் வாழ்க்கையில் நடக்கிறது என்பது இந்த படத்தின் ரகசியம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


சார்லி சாப்ளின் 2 படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் சக்தி சிதம்பரம்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்