ads

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான சங்கர் ரஜினியின் '2.0' படத்திற்கு பிறகு 'இந்தியன் 2' படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார். இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகள் நிறைவடைந்து விரைவில் படப்பிடிப்பினையும் துவங்கவுள்ளனர். முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இவர், அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் புது படங்களை ஒரு ரசிகராக கண்டுகளித்து நல்ல படங்களை வெகுவாக பாராட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 4இல் வெளியான 96 மற்றும் ராட்சசன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வருகின்றன.

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்

இந்த படங்களை பார்த்த இயக்குனர் சங்கர் படக்குழுவினரை டிவிட்டரில் மனமார வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவருடைய டிவிட்டரில் "96..அனைவருக்கும் ஏதோஒரு வகையில் நெருக்கமான இணைப்பு இருக்கும். அது தான் இந்த படத்தின் சிறப்பு. விஜய் சேதுபதி த்ரிஷா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குனர் பிரேம்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். ராட்சசன் - இது மற்றொரு சுவாரஷ்யமான படம். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமாருக்கு நாம் கைதட்டியே ஆக வேண்டும்" என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்

96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்