ads

தன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய இயக்குனர் ராஜமௌலி

தன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய இயக்குனர் ராஜமௌலி

தன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய இயக்குனர் ராஜமௌலி

பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த பிரமாண்ட படம் 'RRR'. இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்கள் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இதனால் டோலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் இந்த படத்திற்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களிடம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ராஜமௌலி துவங்கியுள்ளார். பாகுபலி, பாகுபலி 2 படங்களின் வரிசையில் இந்த படமும் மிகுந்த பொருட்செலவில் உருவாக உள்ளது.

இந்த படத்திற்காக பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்த படத்தில் நாயகிகளாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர்,ஆலியா பட் போன்ற நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த படத்தின் நாயகிகள் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளனர். 

தன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய இயக்குனர் ராஜமௌலி