மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் இயக்குனர் வெற்றி மாறன்

       பதிவு : Feb 28, 2018 18:24 IST    
நடிகை ஸ்ரீபிரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள நடிகை ஸ்ரீபிரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள 'மிக மிக அவசரம்' படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார், Image Credit - Facebook (@Vetrimaaran)

ஸ்கெட்ச், கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'மிக மிக அவசரம்'. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக அமைதிப்படை 2, கங்காரு போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு புதியகீதை, ராமன் தேடிய சீதை போன்ற படங்களின் இயக்குனர் ஜெகன்நாதன் கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் முதுக்கு முத்தாக, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த ஆரிஸ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தனது நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களோடு முத்துராமன், லிங்கா, 'ஆண்டவன்கட்டளை' அரவிந்த், வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி, ராமதாஸ், சரவண சக்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

கதைக்கு முக்கியத்துவம் தந்து சிறு பட்ஜெட் படங்களையும் லாபாம் பார்க்காமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது தனது சொந்த நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில் இந்த படத்தை வெளியிட உள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

மிக மிக அவசரம் படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது, Image Credit - Youtube (JSK Film Corporation)மிக மிக அவசரம் படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது, Image Credit - Youtube (JSK Film Corporation)

மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் இயக்குனர் வெற்றி மாறன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்