ads

பில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு

பில்லா ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது ஹிந்தியில் கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

பில்லா ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது ஹிந்தியில் கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன், இயக்குனர், எழுத்தாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் பணி புரிந்து வருகிறார். இவர் 2003இல் 'குறும்பு' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், யட்சன் மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா, ஆரம்பம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'யட்சன்'.

இந்த படத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர். 2015-இல் வெளியான இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக இவருடைய படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது ஹிந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த 1999 ஜூலை மாதத்தில் கார்கில் போரின் இறந்த கேப்டன் விக்ரம் பத்ரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்து வருகிறார். இந்த படத்தை கரண் ஜோகர் தன்னுடைய தர்மா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இவருடன் ஷபீர் பாக்ஸ்வாலா என்ற நிறுவனமும் இணைந்து இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். இது குறித்து அறிவிப்பை தயாரிப்பாளர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் கதையை சந்தீப் ஸ்ரீவத்சவா என்பர் எழுதியுள்ளார்.

கேப்டன் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து வருகிறார்.கேப்டன் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து வருகிறார்.

பில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு