இணையத்தில் பரவும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ்

       பதிவு : Feb 12, 2018 15:32 IST    
divya sathyaraj explains rumors about acting divya sathyaraj explains rumors about acting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை நிரூபித்து காட்டியவர். இவருடைய ஒரே மகள் திவ்யா சத்யராஜ். தற்போது இவர் ஊட்டச்சத்து மருத்துவராக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ் "திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க உள்ளதாக தற்போது பல வதந்திகள் பரவி வருகிறது. இந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான் சினிமாவில் நடிக்க விரும்பவே இல்லை.

 

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். இதனை அடுத்து ஊட்டச்சத்து குறித்த பிஎச்டி உயர் படிப்பிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். சினிமாவின் மீது எனக்கு அதீத மரியாதை இருந்து வருகிறது. அடிக்கடி சில படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால் அதுவும் திரைப்படம் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இணையத்தில் பரவும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்