ads

'என்னை நோக்கி பாயும் தோட்டா' மூன்றாவது பாடல் வெளியீடு தேதி

ennai nokki payum thotta movie songs

ennai nokki payum thotta movie songs

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் இயக்குனர் கவுதம் மேனன் சீயான் விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். ஆனால் நடிகர் விக்ரம் தற்போது 'சாமி 2' படத்தில் பிசியாக இருப்பதால் இயக்குனர் கவுதம் மேனன் கிடப்பில் போடப்பட்ட 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது அதற்கான படப்பிடிப்பு பணிகளை தற்போது தொடங்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் மீதமுள்ள காட்சிகளை தற்போது மகாபலிபுரம் சாலையில் உள்ள படப்பிடிப்பு தலத்தில் நடந்தது. த்ரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான ஓன்ராகா என்டர்டைன்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மதன் தயாரித்து வருகிறார்.

நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராணா மற்றும் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் 'மறுவார்த்தை' மற்றும் 'நான் பிழைப்பேனோ' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் 'விசிறி' என்ற மூன்றாவது பாடலை டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

'என்னை நோக்கி பாயும் தோட்டா' மூன்றாவது பாடல் வெளியீடு தேதி