தனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்

       பதிவு : Dec 25, 2017 14:08 IST    
padai veeran song padai veeran song

மணிரத்தினம் உதவி இயக்குனர் தனா இயக்கத்தில் 'மாரி' பட வில்லன் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்து வரும் படம் 'படை வீரன்'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ், பிரியன் வரியில்  கார்த்திக் ராஜா இசையில் உருவான 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...' என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ் படமாக்கப்படும் விதத்தை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை தனா மேற்கொண்டிருக்கும் இப்படத்தில் பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். மேலும் டிசம்பரில் வெளிவர உள்ள இப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைக்க ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடலும் அதன் மேக்கிங் விடியோவும் இன்று மாலை 6மணிக்கு வெளியிட உள்ளார். 

 


தனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்