'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

       பதிவு : Nov 23, 2017 19:43 IST    
dhanush visit padai veeran movie shooting dhanush visit padai veeran movie shooting

இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்தினம் உதவி இயக்குனர் தனா இயக்கும் 'படைவீரன்' படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னதாக படைவீரன் படத்தை நடிகர் தனுஷிற்காக பிரத்யேகமாக போட்டு காட்டப்பட்டது. படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில் பிரியன் வரிகளில் உருவான 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...' என தொடங்கும் பாடலை தனுஷ் பாடியுள்ளார். 

படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலின் காட்சியை நிறைவு செய்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்படும் விதத்தை மிகவும் பாராட்டியுள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை தனா மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அகில், அம்ரிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது. 

 


'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்