தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்

       பதிவு : Nov 05, 2017 10:15 IST    
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்

நடிகர் தனுஷ் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று அனைத்து துறைகளிலும் பிஸியாக உள்ளார். ஒரு இந்திய நடிகர் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருப்பது அனைவரும் ஆச்சர்ய படும் விஷயமாகும். இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர்'. இந்த படத்தை கென் ஸ்காட் இயக்குகிறார்.ஹாலிவுட் பிரபலங்கள் பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி உள்ளிட்டோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த படத்தில் தனுஷ் இளைஞர் கதாபாத்திரத்தில் படம் முழுக்க தன்னுடைய தந்தையை தேடி அலையும் கதாபாத்திரமாக இருக்கிறதாம். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு உலகத்தில் பலத்த எதிர்பார்ப்பு அமைந்திருக்கிறது. ரோமன் ப்யூர்டோலஸ் எழுதிய 'The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe' என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறுகிறதாம். தனுஷின் முக்கிய படமான இதை சோனி பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரிப்பது பெருமைக்குரியது. 

 


தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்