எதிர்பாராத தருணத்தில் எந்திரன் 2.0 ட்ரைலர் வெளியானது

       பதிவு : Mar 04, 2018 10:18 IST    
enthiran teaser leaked unoffical enthiran teaser leaked unoffical

இன்று அதிகாலை அதிர்ச்சியூட்டும் வகையில் எந்திரன் 2.0 திரை  படத்தின் ட்ரைலர் இன்டர்நெட்டில் வெளியானது. இந்த ட்ரைலர் மிக தெளிவாகவும், ஒரு சிறு திரையில் ஓளிபரப்பும் போது எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட பட குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தாலும், அதிகாரபூர்வ ட்ரைலரை மிக விரைவில் வெளியிட நடவெடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ட்ரைலர் வெளியிட்ட நபரை மிக சுலபமாக யார் என்று கண்டுபிடித்துவிடலாம், ஏனனில் சிறு திரையில் ஒளிபரப்பானபோது குறிப்பிட்ட சிலரே இருந்துள்ளனர். திரு ஷங்கர் அவர்களின் ஐ படத்தின் ட்ரைலர் இதே போல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா திரைப்படத்தின் ட்ரைலர் அறிவித்த தேதியின் முன்னதாகவே வெளியானது குறிப்பிடத்தக்கது. இது போன்று பெரிய ஹீரோக்கள் படத்தின் ட்ரைலர் வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது.

 

நாட்டில் நடக்கும் திடீர் நவீனமயமான தாக்குதலை முறியடிக்க சிட்டி ரோபோ வருவது ட்ரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்களால் முடிந்தவரை இன்டர்நெட் மற்றும் வாட்ஸப்பில் பரவும் ட்ரைலரை அன்பான முறையில் அகற்ற கேட்டுக்கொண்டுள்ளனர்.


எதிர்பாராத தருணத்தில் எந்திரன் 2.0 ட்ரைலர் வெளியானது


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்