நான்கு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ரேவதி

       பதிவு : Nov 03, 2017 15:23 IST    
நான்கு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ரேவதி

முன்னணி நடிகைகளின் ஒருவரான ரேவதி 'பவர் பாண்டி' படத்தினை தொடர்ந்து மலையாளத்தில் 'கிணர்' படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்படத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக நடிக்கிறார். எம் ஏ நிஷான் இயக்கும் இப்படத்தில் மற்றொரு தேசிய விருதினை பெற்ற  தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியான ஜெயா பிரதா 4 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு  மீண்டும் இப்படத்தின் மூலம் திரைக்கு வர இருக்கிறார். 

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் எடுக்க இருக்கும் படத்தின், நீரின் பிரதிநிதித்துவம் கொண்டதாகவும் இன்றைய சமூதாயத்தில் நீரின் தேவைகளை அடைப்படையினை வெளிப்பத்தும் கதையாக அமைகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் பசுபதி, ஜோய் மாதவ், இன்ட்ரன்ஸ் மற்றும் சிலர் நடிக்கவுள்ளனர்.    

 

எம் ஜெயச்சந்திரன் இசையமைக்கும் இப்படத்தில் புகழ் பெற்ற பாடகர்களான கே ஜே யேசுதாஸ் மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியன் பாடல்களை பாடயிருக்கின்றனர். மலையத்தில் கே ஜே யேசுதாஸ் மற்றும் தமிழில் எஸ் பி பாலசுப்ரமணியன் பாடல்கள் பாடுவதாக தகவல்கள் வந்துள்ளது.     
 


நான்கு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ரேவதி


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்