ads
வெளியானது நடிகர் கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் டீசர்
வேலுசாமி (Author) Published Date : Oct 30, 2018 19:55 ISTபொழுதுபோக்கு
கொம்பன், மருது, கொடி வீரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் எம் முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'தேவராட்டம்'. இயக்குனர் முத்தையாவின் படங்கள் என்றாலே ஆக்சன், சண்டித்தனம், காதல், காமெடி போன்றவை மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்தையும் மதுரை, கோரிபாளையம் போன்ற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை வைத்து படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் அபி அபி போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தின் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் திரைக்கு வரவுள்ளது.