ads

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஹரிஸ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பு

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெளியாகவுள்ளது.

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெளியாகவுள்ளது.

பொறியாளன், வில் அம்பு படங்களின் மூலம் பிரபலமான நடிகர் மற்றும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'பியார் பிரேமா காதல்'. இயக்குனர் எலன் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ரைசா நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. காதலை மையமாக வெளியான இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் தற்போது இந்த படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

]பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஹரிஸ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பு

இந்த படத்திற்கு பிறகு ஹரிஸ் கல்யாண் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் புதுப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து உருவாக்கி வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை நாளை நடைபெற உள்ள பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றி நிகழ்ச்சியில் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பினை வெளியிடுகிறார்.

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஹரிஸ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பு

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஹரிஸ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பு