ads

ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

ஹரிஸ் கல்யாணின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஹரிஸ் கல்யாணின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் முதல் சீஸனின் போட்டியாளரான ஹரீஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றி நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மற்றும் இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிறகு டிவிட்டரில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.  இந்த படத்தினை விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் 'காளி' படத்தில் பிரபலமான சில்பா மஞ்சுநாத் ஹரிஷ் கல்யாணின் 'இதய ராணியாக' நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை மாதவ் மீடியா மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றது.

ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்