ads

வெள்ளத்தால் நாசமடைந்த கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு

குளு மணாலியில் நடைபெற்ற கார்த்தியின் தேவ் படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குளு மணாலியில் நடைபெற்ற கார்த்தியின் தேவ் படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தேவ்'. கார்த்தியின் 17வது படமான இந்த படத்தில் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குளு மணாலி என்ற இடத்தில் நடித்து பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வந்துள்ளனர்.

ஆனால் இமாச்சல் பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் கேரளாவை போன்று மாநிலம் முழுவதிலும் ஏராளமான இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு நேர்ந்து வருகிறது. இந்த வெள்ளத்தில் கார்த்தியின் தேவ் படக்குழுவும் சிக்கியுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி தேவ் படத்தின் 140 தொழில்நுட்ப கலைஞர்கள் தவித்து வருகின்றனர். இது தவிர இந்த படப்பிடிப்பிற்காக சுமார் 1 கோடி அளவில் போடப்பட்ட செட்டும் நாசமடைந்துள்ளது.

இதனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இமாச்சல் பிரதேசத்தில் சாலைகள் அடித்து செல்லப்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளனர்.

வெள்ளத்தால் நாசமடைந்த கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு