ads
டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு - ஜெயம் ரவி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 20, 2017 11:55 ISTபொழுதுபோக்கு
மிருதன், போகன், வனமகன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி 'டிக் டிக் டிக்' விண்வெளியை சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். மிருதன் படத்தினை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜா 'டிக் டிக் டிக்' படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ரவியுடன் இணைந்துள்ளர்.
நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆரோன் அஜிஸ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன் உள்பட பலர் நடித்துள்ளார். விண்வெளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசரை மெர்சல் படத்தின் இடைவேளை பகுதியில் வெளியிட்டனர். இந்நிலையில் டீசருக்கு நல்ல வரவேற்புகள் ரசிகர்களிடமிருந்து கிடைத்தது.
இதனை அடுத்து படத்தின் முக்கியமான அறிவிப்பினை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக படத்தின் நாயகன் ஜெயம் ரவி அவரது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ஒரு வேல இசை வெளியீடு தேதி, படத்தின் சில முக்கிய அம்சங்கள் பற்றி வெளியிடுவார்களோ என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சி நடைபெறு வருகிறது.
ஜெயம் ரவி வெளியிட்ட தகவல் :
இந்நிலையில் வருகிற 24ம் தேதி 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரைலர் வெளியிடுவதாக அவரது ட்விட்டில் பதிவு செய்துள்ளார்.
.
Here’s the much awaited news!!! Happy to announce #TikTikTikTrailerFromNov24 💥💥💥Enjoy this out of the world experience!! Can’t wait for you all to see it. Proud of this one ðŸ‘ðŸ¼ðŸ‘ðŸ¼ðŸ‘🼠#FirstIndianSpaceFilm @ShaktiRajan @JabaksMovies @immancomposer @NPethuraj pic.twitter.com/b3eElKn8wc
— Jayam Ravi (@actor_jayamravi) November 20, 2017