மறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு வருமான வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வருகிறது

       பதிவு : Mar 16, 2018 16:10 IST    
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு வரும் 27ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு வரும் 27ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரீவித்யா. இவர் தன்னுடைய வாழ்க்கையில் 40 வருடங்களை சினிமா உலகில் கழித்தவர். இவர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிசந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி  நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் 1969 ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான இவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்று நோயால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சென்னையில் உள்ள சுப்ரமணியபுரம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்று உள்ளது.

 

தற்போது இந்த வீட்டில் நடன பயிற்சி நடந்து வருகிறது. இந்த வீட்டின் வாடகை பணத்தை ஸ்ரீவித்யாவின் வருமான வரிக்காக வருமான வரித்துறை வசூலித்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வீட்டை வருமான வரித்துறை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.

வருகின்ற 27-ஆம் தேதி இந்த வீட்டின் ஏலம் நடக்க உள்ளது. இந்த வீடு 1250 சதுர அடி அளவு கொண்டுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரித்துறை, மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக  இந்த வீடு எல்லாம் விடப்படுவதாக தெரிவித்துள்ளது. 

 


மறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு வருமான வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வருகிறது


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்