ads

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்

Ispade Rajavum Idhaya Raniyum Hero Harish Kalyan movie list

Ispade Rajavum Idhaya Raniyum Hero Harish Kalyan movie list

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவரும் பத்தாவது திரைப்படம் இது. இவர் நடித்த முதல் படம் சிந்து சமவெளி, இதில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் படம். பிறகு நல்ல படங்கள் ஹரிஷ் கல்யாணிற்கு அமையவில்லை என்றாலும் வில் அம்பு படம் ஒரு நல்ல படமாக அமைந்தது, நல்ல விமர்சனங்களும் கிடைத்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தியிருந்தார். இவர் பெரிய அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், இவருக்கு ஓரளவிற்கு ரசிகர்கள் இருந்தனர் அதிலும் பெண் ரசிகர்கள் அதிகம். இதன் காரணத்தினாலே தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த நிகழ்ச்சி, விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் எனும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இவருக்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின் இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்ந்து பங்கேற்ற ரைசாவுடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இந்த படம் நல்ல ஒரு காதல் கதையுடன் இருந்ததால் நல்ல வசூலும் வரவேற்பும் கிடைத்தது. அதற்கு பின் வெளிவந்த படம்தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த படங்களின் பெயர்கள்

  1. சிந்து சமவெளி
  2. சட்டப்படி குற்றம்
  3. சந்தமாமா
  4. பொறியாளன்
  5. வில் அம்பு
  6. காதலி
  7. பியர் பிரேமா காதல்
  8. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
  9. சஞ்சய் பாரதி (இன்னும் வெளிவரவில்லை)
  10. கெஸ்ட் (இன்னும் வெளிவரவில்லை)

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்