ads

கல்லூரி கதையின் பின்னணியில் உருவாகிவரும் ஜெயம் ரவியின் புதுப்படம்

அப்பா குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது.

அப்பா குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது.

டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடங்கமறு மற்றும் தனிஒருவன் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் 'அடங்கமறு' படத்தினை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடலை முன்னதாக படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். குறும்பட இயக்குனரான இவர் முன்னதாக 'அப்பா' என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமானவர். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளார்.

இவருடன் மற்றொரு நாயகியாகவும் கன்னட நடிகையான சம்யுக்தா ஹெச் என்பவர் இணைந்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று சென்னையில் துவங்கியுள்ளனர். கல்லூரி கதையின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

கல்லூரி கதையின் பின்னணியில் உருவாகிவரும் ஜெயம் ரவியின் புதுப்படம்