ads

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி

 'டிக் டிக் டிக்' படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'அடங்கமறு'. 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்சன் கலந்த அதிரடி படமான இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதே தேதியில் நடிகர் தனுஷின் மாரி 2வும், விஜய் சேதுபதியின் சீதக்காதியும் வெளியாகவுள்ளது.

இது தவிர நடிகர் விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார் பட்டி சிங்கம்' படமும் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் தினத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தியில் கடந்த 2015இல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற 'பேபி' படத்தின் தமிழ் ரீமேக்காக 'அடங்கமறு' உருவாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் சற்று அதிகரித்துள்ளது.

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி