ads

ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக் ஹீரோயின் தமன்னா ஹீரோவும் ரெடி

jigarthanda movie hindi remake cast and crews

jigarthanda movie hindi remake cast and crews

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'பிட்சா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. நடிகர் சித்தார்த் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இயக்குனருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் பாபி சிம்ஹா துணை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் குரூப் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.  'பிட்சா' படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வந்தது. இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்த படத்திற்கு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல் வந்துள்ளது. தற்போது இந்த இந்தியில் ரீமேக் செய்யவுள்ள இந்த படத்தில் 'லட்சுமி மேனன்' கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவும், 'பாபி சிம்ஹா' கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் 'சித்தார்த்' கதாபாத்திரத்திற்கு பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் பர்ஹான் அக்தர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரும் விலக, 'பியார் கா பஞ்சமா' படத்தின் மூலம் பிரபலமான கார்த்திக் ஆர்யன் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார்.

இந்தியில் உருவாகவுள்ள இந்த படத்தை இந்தி மற்றும் மராத்தி இயக்குனரான நிஷிகாந்த் காமத் இயக்கவுள்ளார். இவர் முன்னதாக தமிழில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் வெளியான 'எவனோ ஒருவன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது.

kartik aaryan sanjay dutt in jigarthanda movie hindi remakekartik aaryan sanjay dutt in jigarthanda movie hindi remake

ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக் ஹீரோயின் தமன்னா ஹீரோவும் ரெடி