ads

ஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு

kee movie official trailer released

kee movie official trailer released

நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'கீ'. இந்த படத்தை இயக்குனர் காலீஸ் எழுதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவராவார். இந்த படத்தை குலோபல் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நகுரன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் நாயகியாக நடிகை நிக்கி கல்ராணி இணைந்துள்ளார். இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன், அனைக்கா சொட்டி, கோவிந்த் பத்மசூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யு/எ சான்றிதழ் அளித்துள்ளது. காமெடி த்ரில்லர் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த போஸ்டர், டீசர் மற்றும் ராஜா பாட்டு மற்றும் பத்திக்குச்சு பாத்தியா ஆகிய இரு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் அனைத்து இசை மற்றும் ட்ரைலர் வருகிற 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முன்னதாக தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி, காலீஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு