ads

ஜூனியர் என்டிஆரின் தந்தை கார் விபத்தில் மரணம்

பிரபல தெலுங்கு நடிகரான நந்தமுறி ஹரிகிருஷ்ணா ஆந்திர பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரான நந்தமுறி ஹரிகிருஷ்ணா ஆந்திர பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல் வாதியான நந்தமுறி ஹரிகிருஷ்ணா ஆந்திர பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் 1960ஆம் ஆண்டில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து படி படியாக உயர்ந்தவர். இவர் மறைந்த ஆந்திர பிரதேச முதலமைச்சரான NT ராமா ராவின் நான்காவது மகனாவார்.

இவருக்கு ஜானகி ராம், கல்யாண் ராம், ஜூனியர் என்டிஆர் ஆகிய மூன்று மகன்களும், நந்தமூரி சுஹாசினி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜூனியர் என்டிஆருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய தந்தையான நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்தில் தனது ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் காவாலியில் இருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு பயணித்துள்ளார்.

நாள்கொண்டா நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் மணிக்கு 160கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது இவருடைய மறைவிற்கு  ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Image Credit - @anusha_puppala (Twitter)Image Credit - @anusha_puppala (Twitter)