காலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது

       பதிவு : Jun 07, 2018 09:57 IST    
இன்று வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டாரின் காலா படத்தின் 40 நிமிட காட்சியை படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டாரின் காலா படத்தின் 40 நிமிட காட்சியை படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் காலா. கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் காலா கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல், குடும்பம், ஆக்சன், காதல் போன்றவற்றின் கலவையாக வெளியான இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

ரஜினியின் மருமகன் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியான இந்த படம் பைரஸி இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான அடுத்த சில மணிநேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் வெளியான இந்த படத்தை, படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக் மூலம் 40 நிமிட காட்சியை லைவாக காண்பித்துள்ளார்.

 

இதனை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்த நிலையில் லைவ் பண்ண நபரின் பேஸ்புக் கணக்கை தடை செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர ரஜினிகாந்த் படம் என்றாலே 10 நாட்களுக்கு மேலாக கூட்டம் அலைமோதும், ஆனால் இந்த படத்தின் டிக்கெட் வசூலும் குறைவானதாகவே பெற்று தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் வசூலிலும் குறைவான தொகையை சந்தித்துள்ளது.


காலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்