ads

மெட்ராஸ் புகழ் கலையரசனின் களவு பட மோஷன் போஸ்டர்

kalaiyarasan kalavu motion poster release

kalaiyarasan kalavu motion poster release

‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் நாயனாக நடித்து வரும் படம் ‘களவு'. இவர் முதல் முதலில் பிரபல திரைப்பட இயக்குனர் மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களின் படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த 'மெட்ராஸ்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்த படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது அளிக்கப்பட்டது. மேலும் பிலிம் பேர் விருது மற்றும் சீமா விருது  பரிந்துரைக்கப்பட்டது. இதனை தொடந்து ராஜா மந்திரி, டார்லிங் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.    

இந்நிலையில் குற்ற செயல்களை மையமாக வைத்து இவர் நடிப்பில் உருவாக்கி வரும் 'களவு' படத்தில் இவரது கேரக்டர் (சுஜித்) மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி அபிராமி இணைந்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், வெங்கட் பிரபு, சின்னி ஜெயந்த் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘Spicy Cool Impressions – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இவருடன் இணைந்து விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். வருகிற மார்ச் மாதம் வெளிவர உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த நாட்களில் வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

மெட்ராஸ் புகழ் கலையரசனின் களவு பட மோஷன் போஸ்டர்