ads
தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையால் தப்பிய கலகலப்பு 2 திரைப்படம்
ராசு (Author) Published Date : Mar 09, 2018 13:20 ISTபொழுதுபோக்கு
தற்போதுள்ள தமிழ் சினிமா துறையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சிறு பட்ஜெட் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை வெளிவருகின்றன. முந்தைய காலங்களில் ஒவ்வொரு படங்களும் 100 நாட்களை கடந்தும் படங்கள் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும். ஆனால் தற்போதுள்ள சூழலில் ஒரு வாரத்தை கடப்பதை படக்குழுவினருக்கு சிரமமாக உள்ளது.
இதில் நல்ல தரமான படங்கள் என்றாலும் அதிகபட்சமாக 50 நாட்கள் வரை தான். அதற்குள்ளாக ஏராளமான படங்கள் வெளிவந்து திரையரங்குகள் கிடைக்காமல் முன்பு வெளிவந்த படங்களையும் ஒரு வாரத்திற்குள் வெளியேற்றி விடுகின்றனர். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்களின் பிரச்சனையும், திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்சனையும் நடந்து வருகிறது.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்க போராட்டங்களால் திரையரங்குகளில் புது படங்கள் வெளிவரவில்லை. இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மட்டுமே திரையிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் கூட்டமும் இல்லாமல் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதன் பிறகு நேற்று நடந்த திரையரங்கு உரிமையாளர்களின் கூட்டத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மார்ச் மாதங்களில் வெளிவர உள்ள படங்களின் நிலைமை கேள்வி குறியாக உள்ளது.
தற்போது திரையரங்குகளில் முன்பு பிப்ரவரி மாதங்களில் வெளிவந்த படங்களான நாச்சியார், கலகலப்பு 2, சவரகத்தி, சொல்லிவிடவா, நாகேஷ் திரையரங்கம், வீரா, கேணி போன்ற படங்கள் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 'நாச்சியார்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. நல்ல கதையம்சம், சிறப்பான நடிப்பு போன்றவை இருந்தாலும் இந்த படம் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே ஓடி கொண்டிருக்கிறது.
இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு 2' படம் தற்போது வரை திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் கடந்த 2012 இல் வெளியான 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆனால் முன்பு வெளியான கலகலப்பு படத்தின் கதையம்சம் 'கலகலப்பு 2' படத்தில் இல்லாவிட்டாலும் காமெடியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பகுதி ஓரளவிற்கு இருந்தாலும், இரண்டாம் பகுதி கலகலப்பா இருந்த காரணத்தினால், தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்குறது.
தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் பிரச்சனையால் 'கலகலப்பு 2' படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. வழக்கமாக வெளிவரும் படங்களின் மத்தியில் இந்த படம் ஓரிரு வாரத்தை கடந்து ஓட கூடிய படம் தான்.ஆனால் தற்போது இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.