சூரி புது பட ஷூட்டிங்கில் செய்த செயல் வைரலாகம் புகைப்படம்

       பதிவு : Jan 26, 2018 17:30 IST    
soori kadaikutty singam shooting updates soori kadaikutty singam shooting updates

தமிழ் திரையுலகில் காமெடியில் தற்பொழுது கலக்கி வரும் சூரி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் இடம் பெற்ற 'பரோட்டா' காமெடியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வெகுவான வரவேப்பை பெற்றிருந்தது. தற்பொழுது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'பக்கா' மற்றும் கார்த்தி நடிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்.    

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கிராமத்து பாட்டிகள் இடம் பெரும் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகின்றனர். இப்படப்பிடிப்பு நடைபெற்று இருக்கும் இந்நிலையில் சூரி பாட்டிகளுடன் ஒரு செல்பி எடுத்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில் இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி...(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்) என்று பதிவு செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.     

 

இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் சார்பில் அவரே தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 'கடைக்குட்டி சிங்கம்' என்று தலைப்பினை வைத்துள்ளனர். இந்த டைட்டிலின் பாதி சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சிங்கம்' படத்தின் டைட்டில் என்பதாலும், இப்படத்தினை சூர்யா தயாரித்து வருவதாலும் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் பெருதும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. கடந்த நாட்களில் வெளியான டைட்டில் லுக் போஸ்டரும் வலைதளத்தில் வெகுவாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.  


சூரி புது பட ஷூட்டிங்கில் செய்த செயல் வைரலாகம் புகைப்படம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்