ads
பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி
புருசோத்தமன் (Author) Published Date : Oct 09, 2018 10:00 ISTபொழுதுபோக்கு
மலையாள முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ஜீத்து ஜோசப், இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'ஆதி'. இந்த படத்தின் மூலம் நடிகர் மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லாலை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு இவருடைய இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. கடந்த 2013இல் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனால் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் 'பாபநாசம்' என்ற தலைப்பில் கமல் ஹாசன், கவுதமி ஆகியோரது நடிப்பில் வெளியானது. தமிழில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் வாரியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தை இவரே இயக்கியிருந்தார். தற்போது இவருடைய இயக்கத்தில் இந்தியில் 'பாடி (Body)' என்ற படமும், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படமும் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவர் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆக உள்ளார்.
தமிழில் இவருடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளார். இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். நடிகர் கார்த்தி தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றிக்கு பிறகு புது முக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் 'தேவ்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பினை முடித்த பிறகு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.