தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்குரி

       பதிவு : Apr 19, 2018 10:54 IST    
தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பிறகு நாளை மெர்குரி படம் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பிறகு நாளை மெர்குரி படம் வெளியாகவுள்ளது.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த தயாரிப்பாளர் வேலை நிறுத்தம், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்று கொண்டதால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறுகையில் "அனைத்து திரையரங்கில் டிக்கெட் விற்பனை வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கணினி மையமாக்கப்படும்.

நடிகர்களின் சம்பளம் குறித்து ஆலோசனை செய்ய நடிகர் சங்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட பிறகு நாளை முதல் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது குறித்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து திரைப்பட அமைப்புகளையும் சார்ந்த ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் அதிகபட்ச கட்டணம் 150க்கும் மேல் இல்லாதவாறு பார்த்து கொள்ளப்படும்.

 

டிக்கெட் கட்டணம் கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைக்கப்படும். நாளை வெள்ளிக்கிழமை முதல் தமிழ் படங்கள் வெளியாக உள்ளது. மேலும் சினிமா துறைகளின் படப்பிடிப்புகள், இசை நிகழ்ச்சி, டீசர், ட்ரைலர், டப்பிங் போன்ற அனைத்து சினிமா பணிகளும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியாகும் முதல் தமிழ் படமாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்குரி' படம் வெளியாகிறது.

இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதியே தமிழகத்தில் வெளியாக இருந்தது. தயாரிப்பாளர் ஸ்ட்ரைக்கால் தமிழகத்தை தவிர உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகியுள்ளது. ஆனால் வெளியான அன்றே இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் தமிழ் மொழி உள்பட வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் திருட்டு தனமாக வெளியாகியுள்ளது. இதற்கு மெர்குரி படத்தை இணையத்தில் பார்க்க வேண்டாம் என நடிகர் பிரபு தேவா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நாளை ஏப்ரல் 20-ஆம் தேதி 'மெர்குரி' படம் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 


தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்குரி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்