ads

நயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை

KJR Studios confimred no more chances to Radhi Ravi in their upcoming projects. Courtesy KJR Studios

KJR Studios confimred no more chances to Radhi Ravi in their upcoming projects. Courtesy KJR Studios

தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா நடித்து நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ஐரா. வழக்கம்போல் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  இது ஒரு பேய் படமாக இருந்தாலும் நல்ல அழுத்தமான திரைக்கதையுடன் இருப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.நயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை

Nayanthara in Airaa Movie Poster.

சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது மூத்த நடிகர் மற்றும் அரசியல் பேச்சாளர் திரு ராதாரவி வழக்கம்போல் அனைவரையும் திட்டி தீர்க்கும் இவர், நயன்தாரா கதாநாயகியாக நடித்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டில் அவரை குறிப்பிட்டு பெண்களை இழிவுபடுத்தி பேசியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, இவரை திமுக தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தும் திரு ராதாரவி தான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இவரின் பேச்சிற்கு அணைத்து நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வந்துகொண்டிருக்கிறது. திரு ராதாரவி, இந்த வகையான பேச்சு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு பேட்டியில்  குறிப்பிட்டுள்ளார். KJR Studios நிறுவனம், தங்களின் கதாநாயகியை இவாறு மோசமாக பேசியதால், இனி வரும்காலங்களில் ராதாரவி அவர்கைளை தங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று தங்களது சமூக வலயத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

நயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை