ads

கோட்டா சீனிவாசன் படங்களை தவிர்த்து வருவதற்கு காரணம் இது தான்

கடந்த 8 வருடங்களாக பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். இது குறித்து அவர் பேசியுள்ளார்.

கடந்த 8 வருடங்களாக பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். இது குறித்து அவர் பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல் வாதியான கோட்டா சீனிவாசன், 1978ஆம் ஆண்டு முதல் 40 வருடங்களாக 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் அதிகமாக தெலுங்கு மொழியில் மட்டும் 240 படங்களில் நடித்துள்ளார். தமிழில் 32 படங்களிலும், ஹிந்தியில் 8 படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமான படம் சீயான் விக்ரமின் 'சாமி'. 2003இல் வெளியான இந்த படத்தில் பெருமாள் பிச்சையாக இவருடைய நடிப்பு சிறந்த வில்லன் என்ற பெருமையை தேடி தந்தது. தன்னுடைய வசனம், சிரிப்பு மற்றும் அசாத்தியமான நடிப்பு போன்றவற்றால் பல மொழிகளில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. பல மொழிகளில் பல கதாபாத்திரங்களை ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் கடந்த 2010இல் இவருடைய மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் என்பவர் ஐதராபாத்தில் நடந்த விபத்து ஒன்றில் இறந்ததால் அதிகமாக படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிறார். ஆனாலும் அவ்வப்போது ஆண்டுக்கு ஒரு படங்கள் வீதம் சிறு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இது குறித்து சமீபத்தில் பேசிய அவர் "என்னுடைய மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை ஐதராபாத்தில் ஒட்டி வரும்போது எதிர்பாராத விதமாக லாரி மோதி இறந்து விட்டான்.

இன்னமும் அவன் நினைவோடு தான் இருக்கிறேன். அவன் நினைவில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவருக்கு ருக்மணி ராவ் என்ற மனைவியும் பல்லவி மற்றும் பவானி ஸ்ரீனிவாச ராவ் என்று இரு மகள்களும் உள்ளனர். இவருடைய மகன் கடந்த 2010 ஜூன் 20ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏபி போலீஸ் அகாடமி என்ற இடத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் பயணம் செய்யும் போது லாரி மோதி இறந்து விட்டார். இன்னும் அவருடைய நினைவோடு இருப்பதால் தன்னால் அதிகப்படியான படங்களில் நடிக்க முடிவதில்லை. ஆனாலும் அவ்வப்போது ஓரிரு படங்களை மட்டும் நடித்து வருவதாக வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார். 

கோட்டா சீனிவாசன் படங்களை தவிர்த்து வருவதற்கு காரணம் இது தான்