ads

சூர்யா 37 படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

சூர்யா 37 படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

சூர்யா 37 படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் கேவி ஆனந்த். இவர் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனர் சங்கரின் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 37' படத்தை உருவாக்கி வருகிறார். 

ஏற்கனவே அயன், மாற்றான் போன்ற படங்களில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து அவருடைய அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் தன்னுடைய 52வது பிறந்த நாளை படப்பிடிப்பு தலத்தில் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது சூர்யா உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா பாதுகாப்பு அதிகாரியாக நடித்து வருகிறார்.

பிரதமர் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யாவும், இதர முக்கியமான கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, போமன் இராணி போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சயீசா நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சூர்யா 37 படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்