ads

முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

லட்சுமி மேனன் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான லட்சுமி மேனன், தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். தமிழில் இவருடைய நடிப்பில் இதுவரை 11 படங்கள் வெளியாகியுள்ளன. அஜித், ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றது.

கடந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. இவர் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து 'யங் மங் சங்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுசுடன் முதன் முறையாக ஜோடி சேர உள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'வட சென்னை' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்திலும், ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புது படத்தில் தனுசுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது.

முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்