ads

பவன் கல்யாண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய லைக்கா

லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அடுத்ததாக பவன் கல்யாணின் பிளாக் பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளது.

லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அடுத்ததாக பவன் கல்யாணின் பிளாக் பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் 'கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது. இந்த படத்திற்கு பிறகு எமன், தியா, இப்படை வெல்லும் போன்ற 6 படங்களை தயாரித்துள்ளது. இந்த படங்களுக்கு பிறகு 2.0, சபாஷ் நாயுடு, கோலமாவு கோகிலா, வட சென்னை, செக்க சிவந்த வானம், இந்தியன் 2 மற்றும் சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் புது படம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது.

மேலும் பட விநோயோகஸ்தராகவும் நானும் ரவுடி தான், விசாரணை, ஸ்பைடர், இரும்பு திரை, காலா போன்ற படங்களையும் வெளியிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி கடந்த 2013இல் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி பல விருதுகளை வென்ற 'அட்டாரின்டிகி ட்ரெடி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பவன் கல்யாணின் பிளாக் பஸ்டர் வரிசையில் ஒன்றான இந்த படம் தெலுங்கு சினிமாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர் போன்றவற்றிற்கு மொத்தமாக 19 விருதுகளை வென்றுள்ளது. இது தவிர பாக்ஸ் ஆபிஸிலும் 1.87 பில்லியனை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதனால் இந்த படத்தில் முன்னணி நடிகரை நடிக்கவைக்க உள்ளது. விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

பவன் கல்யாண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய லைக்கா