ads

மெர்சல் கூட்டணியில் மீண்டும் தொடரும் ஏஆர் முருகதாஸின் சர்கார்

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியான நிலையில் இந்த படத்தில் மெர்சலை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரபலம் இணைந்துள்ளது.

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியான நிலையில் இந்த படத்தில் மெர்சலை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரபலம் இணைந்துள்ளது.

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. 'சர்கார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. ஆனால் இந்த போஸ்டரில் விஜய் சிகிரெட் பிடிப்பது போன்று இருப்பது சில எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் பாடலாசிரியராக விவேக் இணைந்துள்ளார். மெர்சல் படத்தின் பாடலாசிரியாரான விவேக், ஏஆர் முருகதாஸின் 'சர்கார்' படத்திற்கும் பாடல் வரிகளை அமைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 'ஆளப்போறான் தமிழன்' பாடல் இசைப்புயலின் இசையமைப்பில் விவேக்கின் பாடல் வரிகளில் 5 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. ஆக்சன் மற்றும் அரசியல் படமான இந்த படம் விஜய்க்கு அரசியலில் நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் தீபாவளிக்கு வெளிவந்து விசுவாசம், என்ஜிகே படங்களுடன் மோதவுள்ள இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

மெர்சல் கூட்டணியில் மீண்டும் தொடரும் ஏஆர் முருகதாஸின் சர்கார்