ads

இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் மாதவன்

நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான 'விக்ரம் வேதா' படம் மாபெரும் வெற்றி அடைந்து 100 நாட்களை கடந்து ஓடியது. இவருடைய நடிப்பில் இந்தியில் ஜீரோ மற்றும் சவ்யசாட்சி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. தற்போது இவருடைய நடிப்பில் அடுத்ததாக தமிழில் உருவாகி வரும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவருடைய அடுத்த படத்திற்கு 'ராக்கெட்ரி நம்பி விளைவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணின் வாழ்க்கை கதையான இந்த படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது. விஞ்ஞானி நம்பி நாராயண், அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சுமற்றப்பட்டு பிறகு குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டு வெளிவந்தவர். இவர் ஒரு குற்றவாளியாக 50 நாட்களை சிறையில் கழித்துள்ளார்.

இவருடைய வாழ்க்கை கதையை தற்போது படமாக்கி வருகின்றனர்.  தற்போது சத்தமே இல்லாமல் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தினை நடிகர் மாதவன் மற்றும் ஆனந்த் மகாதேவன் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் மாதவன்