விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா

       பதிவு : Apr 03, 2018 10:58 IST    
விஜய் சேதுபதியுடன் கககபோ, கவண் போன்ற படங்களில் நடித்த மடோனா தற்போது ஜூங்கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன் கககபோ, கவண் போன்ற படங்களில் நடித்த மடோனா தற்போது ஜூங்கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது 'ஜூங்கா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

தயாரிப்பாளர் சங்க போராட்டத்தையும் மீறி போர்ச்சுக்கலில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில், முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை மடோனா, அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார். ‘ஜுங்கா’ படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 


விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்