ads
ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகை
வேலுசாமி (Author) Published Date : Oct 25, 2018 18:10 ISTபொழுதுபோக்கு
காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் இறுதி கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான மாளவிகா மோகனனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவருக்கு தமிழ் ஓரளவிற்கு தான் தெரியும். இதனால் ஒரு மொழிபெயர்பாளரை வைத்து 'பேட்ட' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு 'விசுவாசம்' படத்துடன் மோத உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் போன்றவற்றை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் வெளியீடு தேதி போன்றவற்றையும் அறிவிக்க உள்ளனர்.