ads

வைரலாகும் நடிகர் மம்முட்டியின் பதினெட்டாம் படி புது கெட்டப்

நடிகர் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பதினெட்டாம் படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

நடிகர் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பதினெட்டாம் படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான மம்முட்டி நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் ஸ்ட்ரீட் லைட்ஸ், பரோல், அங்கிள், கேப்டன் போன்ற 8 படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு தமிழில் 'பேரன்பு' படத்திலும், மலையாளத்தில் மதுர ராஜா, மாமாங்கம், யாத்ரா  போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தினை நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனரான சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பதினெட்டாம் படி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'ஜான் ஆப்ரஹாம் பழக்கல்' என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இதற்காக புதுவிதமான கெட்டப்பை கையாண்டுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மம்முட்டியின் புது கெட்டப் அடங்கிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தினை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பில் ஏற்கனவே மம்முட்டியின் தி கிரேட் பாதர், கடல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. 

வைரலாகும் நடிகர் மம்முட்டியின் பதினெட்டாம் படி புது கெட்டப்

வைரலாகும் நடிகர் மம்முட்டியின் பதினெட்டாம் படி புது கெட்டப்