ads

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் 'செக்க சிவந்த வானம்'. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசைக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் 28இல் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர்களான சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி ஆகியோர் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னமின் பெரும்பாலானா படங்களுக்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படம் தொழிற்சாலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் அரவிந் சாமி அரசியல் வாதியாக நடித்துள்ளார். இவரை எதிர்க்கும் நாயகர்களாக சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ராவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேசும், அருண் விஜய்க்கு ஜோடியாக மாடல் நடிகை ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் அரவிந் சாமிக்கு மனைவி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார்

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் வெளியீடு தேதி அறிவிப்பு