மரகத நாணயம் குழுவிடம் இணையும் முன்னணி தயாரிப்பாளர்

       பதிவு : Nov 09, 2017 09:40 IST    
மரகத நாணயம் குழுவிடம் இணையும் முன்னணி தயாரிப்பாளர்

சில மாதங்களுக்கு முன்பு ஏஆர்கே.சரவணன் இயக்கத்தில் வெளிவந்த 'மரகத நாணயம்' படத்தில் ஆதி நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இவருக்கு ஜோடியாக நிக்கிகல்ராணி நடித்திருந்த இந்த படத்தில் ஆனந்தராஜ், ராமதாஸ், டேனியல் போப் மற்றும் சிலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏஆர்கே.சரவணன் முதல் படத்தில் காமெடிகள் நிறைந்து எடுக்கப்பட்டதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படத்திற்கு ஆதரவினை கொடுத்ததன் காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வந்திருந்தது.

மரகத நாணயம் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முன்னதாக .ஆர்.கே.சரவணன் இயக்கவிருக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் கமல் ஹாசன், அஜித், விஜய், விக்ரம் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்த படங்களை தயாரித்த .ஏம்.ரத்னம், .ஆர்.கே.சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் தயாரிப்பாளராக உள்ளார். தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கருப்பன் படத்தினையும் .ஏம்ரத்னம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

 


மரகத நாணயம் குழுவிடம் இணையும் முன்னணி தயாரிப்பாளர்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்