ads
விஜய் மாஸ்டர் படம் ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறதா?
புருசோத்தமன் (Author) Published Date : Apr 15, 2020 22:03 ISTபொழுதுபோக்கு
விஜய் நடிப்பில், கைதி புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு இருப்பதால், மாஸ்டர் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை, மேலும் மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து விஜய் ரசிகர்கள் மிகுந்த அவளுடன் காத்திருந்த வேளையில், இன்று வெளியான செய்தி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
இரண்டாவது ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்கள் இயங்க ஊரடங்கு முடிந்த பின்பும் அறிவிப்பு வருமா என்பது சந்தேகம் தான். காரணம், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மிகுந்த கட்டுப்படாது நிலவும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில், கண்டிப்பாக மே மாதம் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.
நடிகர் விஜயின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், இந்த தேதியில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் வீட்டிலேயே இருந்த மக்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமையும். ஜூன் கடைசி வாரம் என்பதால், ஓரளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்து இருக்கும், மேலும் கட்டுப்பாடுகளும் பெரிய அளவிற்கு இருக்காது என கருதப்படுகிறது.
இன்று வெளியான செய்தி அதிகாரபூர்வ அறிவிப்பாக இன்னும் வராத சூழ்நிலையில், பட குழுவினர் மே மாதம் கொரோனா தாக்கத்தை பொறுத்தே அறிவிப்பார்கள் என்று செய்தி வந்துள்ளது.