ads

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ்

இயக்குனர் சுந்தர் சியின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சியின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார்.

நடிகர், பாடகர் மற்றும் தற்போது இசையமைப்பாளராக மாறியுள்ள சிம்பு நடிப்பில் 'செக்க சிவந்த வானம்' படம் உருவாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 28இல் வெளியாகவுள்ளது. தற்போது இசைப்புயலின் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல் காட்சிகள் வெளிவரவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும், சுந்தர் சி இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் சுந்தர் சி, தெலுங்கில் கடந்த 2013இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற 'அத்தாரின்டிகி தாரேதி' படத்தினை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் சிம்பு, பவன் கல்யாண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கலாம் என பேசப்பட்ட நிலையில் தற்போது மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு நடிகையான மேகா ஆகாஷ் நடிப்பில் தமிழில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் தீபாவளியில் வெளியாகவுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மூலம் பிரபலமாகி தற்போது பூமராங், ஒரு பக்க கதை போன்ற பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். கலகலப்பு 2வை தொடர்ந்து சுந்தர் சியின் அடுத்த படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ்