ads
முதன் முறையாக நவீன் இயக்கத்தில் இணையும் விஜய் ஆண்டனி அருண் விஜய்
வேலுசாமி (Author) Published Date : Nov 01, 2018 18:24 ISTபொழுதுபோக்கு
கடந்த 2013இல் வெளியான 'மூடர்கூடம்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குனர் மற்றும் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தவர் நவீன். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக கொளஞ்சி மற்றும் அலாவுதீனின் அற்புத கேமிரா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவருடைய அடுத்த படம் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி போன்ற இரட்டை கதாநாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களான அருண் விஜயும், விஜய் ஆண்டனியும் ஒன்றிணைகின்றனர். இந்த படத்திற்கு 'அக்னீச் சிறகுகள்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை டி சிவா அம்மா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் 'மூடர் கூடம்' படத்திற்கு இசையமைத்த நடராசன் சங்கரன் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஆக்சன் அதிரடியாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பினை தற்போது துவங்கியுள்ளனர்.