மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இரண்டு புகார்கள்

       பதிவு : Feb 22, 2018 12:53 IST    
Actor RK and Producer Stephen Complaint against Comedu Actor Vadivelu in Producer Association Actor RK and Producer Stephen Complaint against Comedu Actor Vadivelu in Producer Association

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006இல் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் து ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்த படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கி இருந்தார். தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தையும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்டமாக அரண்மனை அமைத்து இருந்தனர்.

ஆனால் இந்த படத்தின் படக்குழுவினருடன் கருத்து மோதல் ஏற்பட்டு இந்த படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வடிவேலு மீது புகார் செய்தனர். இது குறித்து சமீபத்தில் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்திடம் பதில் அளித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பாளர்கள் ஸ்டிபன் மற்றும் ஆர்கே ஆகியோர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளனர்.

 

இதில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே 'எல்லாம் அவன் செயல்' படத்தின் மூலம் திரையுலகிற்கு பிரபலமானார். இவர் தற்போது 'நீயும் நானும் நடுவுல பேயும்' என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இந்த படத்தில் காமெடி நடிகர் கதாபாத்திரத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இதில் நடிக்க நடிகர் வடிவேலு 75 லட்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வடிவேலு வரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தயாரிப்பாளர் ஸ்டிபன் தயாரிப்பில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் புதுபடம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திலும் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் வடிவேலு இந்த படத்தின் கதையை மாற்ற சொன்னதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தயாரிப்பாளர் சங்கம் இந்த புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்க கோரி வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வடிவேலுவை மீண்டும் திரையுலகில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் தொடர்ந்து வரும் இத்தகைய புகார்களால் ரசிகர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.


மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இரண்டு புகார்கள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்