ads
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கில் சாதனை
ராதிகா (Author) Published Date : Jan 24, 2018 18:58 ISTபொழுதுபோக்கு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் ஒரே ஆண்டில் 8 படங்களுக்கு இசையமைத்து சாதனையை படைத்துள்ளார். இவர் இசையில் கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம் ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் க்ளாஸ் அப்பாயி என எட்டு படங்களில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. மேலும் தற்பொழுது திரைப்படங்களில் ட்ரெண்டாகி வரும் பாடல்களின் சிங்கிள் ட்ராக் வெளியீடு 'கைதி நம்பர் 150' என்ற படத்தின் மூலம் முதல் முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் துவங்கி வைத்தார். மேலும் லிரிக் வீடியோவில் புது வித மாற்றத்தையும் புதுப்பித்திருந்தார்.
இவர் முதல் முதலில் 'தேவி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மழை, குட்டி, மாஸ், திருப்பாச்சி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ஆறு, சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை போன்ற பல வெற்றி படங்களில் இசையமைத்திருந்தர். இவர் முதல் முதலில் 'வெர்சன்' என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது மற்றும் சந்தோசம் விருது என இரண்டு விருதினை வாங்கினார். அதன் பிறகு தமிழில் வேங்கை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஐ. டி. எப். ஏ. விருதினை பெற்றிருந்தார். தற்பொழுது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 25வது படத்திலும், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்திலும், ராம்சரணின் 'ரங்கஸ்தலம்' படத்திலும் இசையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.