நாகசைத்தன்யாவின் 16வது பட ஷூட்டிங்

       பதிவு : Jan 19, 2018 17:14 IST    
naga chaitanya new movie shooting start naga chaitanya new movie shooting start

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவரான  நாகசைத்தன்யா ‘யுத்தம் சரணம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது சண்டூ  மொண்டேடி இயக்கத்தில் 'சவ்யசாசி' மற்றும் இயக்குனர் மாருதி தாசரி இயக்கத்தில் 'சைலஜா ரெட்டி அல்லுடு' போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மாருதி இயக்கவிருக்கும் படத்தில்  நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கவுள்ளார். இவர் 'ஸ்வப்னா சஞ்சரி' என்ற மலையாள படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கிலும் சில படங்களில் ஹிட் கொடுத்ததினை தொடந்து தமிழில் விஷால் நடிப்பில் தற்பொழுது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த 'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த முதல் படத்திலையே இவரின் நடிப்பு ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது. 

நாகசைத்தன்யாவின் 16வது படமான 'சைலஜா ரெட்டி அல்லுடு' படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார்.  இந்த படத்தில் இசையமைக்கும் பணியில் கோபி சுந்தர் ஈடுபட நிஸார் ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்புக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடந்து இன்று படத்தின் ஷூட்டிங்கை படக்குழு துவங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக இயக்குனர் மாருதி அவரது ட்விட்டரில் புதிய பயணம் துவங்கிவிட்டது என்று பதிவு செய்ததோடு ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.       

 


நாகசைத்தன்யாவின் 16வது பட ஷூட்டிங்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்