தெலுங்கில் வளம் வரும் அட்டகத்தி நந்திதா

       பதிவு : Feb 08, 2018 18:01 IST    
nandita swetha team up with nithin film nandita swetha team up with nithin film

'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நந்திதா அதனை அடுத்து எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த 'எதிர் நீச்சல்' படத்திற்கான சிறந்த துணை நடிகைக்கான சீமா விருது வழங்கப்பட்டது. பிலிம் பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது, முண்டாசுப்பட்டி படத்திற்காக Edison விருது, மேலும் தெலுங்கில் 'எக்கடிக்கி பொத்தவு சின்னவாடா' படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. தற்பொழுது நந்திதா நெஞ்சம் மறப்பதில்லை, வணக்கமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு முடிவந்திருப்பதாகவும், வணங்கமுடி படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள 'கலகலப்பு 2' படத்தின் முக்கிய வேடத்தில் சில காட்சியில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அட்டகத்தி நந்திதா தெலுங்கில் நிதின் நடிக்கவிருக்கும் 'ஸ்ரீனிவாசா கல்யாணம்' என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு முன்னதாவே  நந்திதாவின் தெலுங்கு அறிமுக படமான 'எக்கடிக்கி பொத்தவு சின்னவாடா' படத்தின் மூலம் இவர்களது ஜோடி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இணையவிருக்கும் நிதின் - நந்திதா படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளனர். மேலும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஷெக்டே தான் முதல் முதலில் கமிட்டாகி இருந்ததாகவும் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கிவரும் மகேஷ் பாபுவின் 25வது படத்தில் பிசியாக நடித்து வருவதால் படத்தில் இருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது.  

 


தெலுங்கில் வளம் வரும் அட்டகத்தி நந்திதா


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்